கோவில்பட்டி கயத்தாறு செட்டிக்குறிச்சி சாலையில் ஒத்தவீடு அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக காவல் நிலையத்துக்கு தகவல் சென்றுள்ளது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாக சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் போலீஸ் விசாரணையில், சடலமாக கிடந்தவர் கயத்தாறு அடுத்து கம்மாபட்டி வடக்கு தெருவை சேர்ந்த கட்டட தொழிலாளி 35 வயதுடைய மில்டன் ராஜ் என்பதும், இவருக்கு திருமணமாகி ராணி என்ற மனைவியும், மிஷன் என்ற 3 வயது குழந்தை இருப்பதும் தெரியவந்தது. கடந்த 25-ம் தேதி கம்மாபட்டி அருகேயுள்ள கிருஸ்துவ ஆலய விழாவிற்கு செல்வதாக மில்டன் ராஜ் தனது வீட்டில் தெரிவித்து விட்டு சென்றுள்ளார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை என்று தெரிய வருகிறது.
இதைத்தொடர்ந்து போலீஸ் விசாரணையில், அதே ஊரை சேர்ந்த விஜயன் என்ற கொத்தனார் கடைசியாக கால் செய்துள்ளார். இதையடுத்து போலீசார் விஜயனிடம் விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். விஜயனுக்கு வெண்ணிலா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளன. இதனிடையே போலீசாரிடம் விஜயன் கொடுத்த வாக்குமூலத்தில், என்னுடைய மனைவி குளிக்கும் வீடியோவை எடுத்து வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டினார். அதனால் எனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை கொலை செய்துவிட்டு வீடியோ மற்றும் போட்டோக்களை அளித்துவிட்டேன் என தெரிவித்தார்.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…