நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பத்தாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.இதனையடுத்து,பிப்.22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.இதற்கடையில்,தொகுதி பங்கீடு,தேர்தல் பரப்புரை உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து,முக்கிய கூட்டணி கட்சிகளின் இடப் பங்கீடு முடிந்து வேட்பாளர் பட்டியல்கள் படிப்படியாக அறிவிக்கப்பட்டன.அதே சமயம்,இதுவரை 37518 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நேற்று மட்டும் 27,365 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
மேலும்,தமிழகம் முழுவதும் இன்று மாலை 5 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடையவுள்ளது.இதனால்,மாநகராட்சி,பேரூராட்சி அலுவலகங்களில் இன்று வேட்புமனு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.அதே சமயம்,முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்களது கட்சி ஆதரவாளர்களுடன் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பத்தாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ளது.அதன்படி,சென்னை,ஆவடி, திருப்பூர்,வேலூர்,சேலம்,கும்பகோணம்,சிவகாசி,தூத்துக்குடி,பூந்தமல்லி,ஆம்பூர்,ஆற்காடு,திருத்தணி,எடப்பாடி உள்ளிட்ட 21 பகுதிகளுக்கான மாநகராட்சி,நகராட்சி மற்றும் பேரூராட்சி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…