#LocalBodyElection:பத்தாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட ம.நீ.ம!

Default Image

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பத்தாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.இதனையடுத்து,பிப்.22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.இதற்கடையில்,தொகுதி பங்கீடு,தேர்தல் பரப்புரை உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து,முக்கிய கூட்டணி கட்சிகளின் இடப் பங்கீடு முடிந்து வேட்பாளர் பட்டியல்கள் படிப்படியாக அறிவிக்கப்பட்டன.அதே சமயம்,இதுவரை 37518  வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நேற்று மட்டும் 27,365 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

மேலும்,தமிழகம் முழுவதும் இன்று மாலை 5 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடையவுள்ளது.இதனால்,மாநகராட்சி,பேரூராட்சி அலுவலகங்களில் இன்று  வேட்புமனு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.அதே சமயம்,முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்களது கட்சி ஆதரவாளர்களுடன் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பத்தாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ளது.அதன்படி,சென்னை,ஆவடி, திருப்பூர்,வேலூர்,சேலம்,கும்பகோணம்,சிவகாசி,தூத்துக்குடி,பூந்தமல்லி,ஆம்பூர்,ஆற்காடு,திருத்தணி,எடப்பாடி உள்ளிட்ட 21 பகுதிகளுக்கான மாநகராட்சி,நகராட்சி மற்றும் பேரூராட்சி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்