மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த பாஜக முக்கிய புள்ளி..!
கமல்ஹசன் முன்னிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த தமிழ்நாடு பாஜக பொருளாதார அணியின் மாநில துணைத்தலைவர் முனியசாமி.
தமிழ்நாடு பாஜக பொருளாதார அணியின் மாநில துணைத்தலைவராக இருந்தவர் முனியசாமி. இந்த நிலையில், இவர் நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில், மநீம கட்சியில் இணைந்துள்ளார்.
கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு நம்மவர் அவர்கள் வருகை தந்தபோது அவரது முன்னிலையில் திரு.V.முனியசாமி அவர்கள் கட்சியில் இணைந்தார்.
அப்போது துணைத்தலைவர்கள் @MouryaMNM, @Thangavelukovai, மற்றும் மதுரை மண்டல செயலாளர் திரு.அழகர் உடனிருந்தனர்.— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 5, 2022