அதிமுகவில் இணைந்த அமமுக முக்கிய புள்ளி..!
அமமுக – மாநில இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் அவர்கள் அதிமுகவில் இணைந்தார்.
சமீப நாட்களாக அதிமுகவில் பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இணைந்து வந்தனர். இதனால், பாஜக மற்றும் அதிமுக இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில், இன்று அமமுக – மாநில இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் அவர்கள் அதிமுகவில் இணைந்துள்ளார்.
செவ்வந்தி இல்லத்தில், அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் ஈபிஎஸ்-ஐ சந்தித்து தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.