மக்கள் நீதி மய்யத்தில் விஜய்க்கு முக்கிய இடம் ..!புலிக்கு பயந்து தன்மீது அமர சொல்கிறார் கமல்ஹாசன் …!மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பகீர் தகவல்
கமல்ஹாசன் கருத்துக்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார்.
மக்கள் நீதிமைய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீப காலமாக தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறார்.இதேபோல் அவர் கட்சிகளையும் நேரடியாகவும் சாடி வருகின்றார்.
இந்நிலையில் சர்கார்’ இசை வெளியீட்டு விழாவில் கற்பனை கேள்விகளை தொகுப்பாளரான நடிகர் பிரசன்னா கேட்டார் .அதற்கு பதில் அளித்த நடிகர் விஜய்,சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை, நிஜத்தில் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன்.மாநிலத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை.மேலிருக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் நல்லவர்களாக இருந்தால், மாநிலம் தானாகவே நல்லதாக இருக்கும்.நான் முதல்வரானால் ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுப்பேன் ; ஆனால் முடியுமா என தெரியவில்லை.நெருக்கடி ஏற்பட்டால் இயற்கையாக நல்ல தலைவர்கள் உருவாவார்கள். அவர்கள் அமைப்பார்கள் நல்ல சர்க்கார் என்று அதிரடியாக பேசினார்.இந்நிலையில் விஜய்யின் இந்த பேச்சு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
நேற்று சேலத்தில் பொதுமக்கள் முன்னிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டார்.அப்போது அவர் கூறுகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியில், நடிகர் விஜய் சேர விரும்பினால், அவருக்கு இடம் உண்டு என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உறுதியாக தெரிவித்தார்.
இந்நிலையில் கமல்ஹாசன் கருத்துக்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், விஜய்க்கு தனது அமைப்பில் இடம் உள்ளதாக கமல்ஹாசன் கூறி இருப்பது புலிக்கு பயந்து தன்மீது அமர சொல்வது போன்றது போல் உள்ளது .மேலும் உயர் பதவியில் இருப்போர் மீது ஆதாரமின்றி கூறும் #MeToo புகாரை ஏற்க முடியாது என்றும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.