எஸ்பிஐ வங்கிகளில் நூதன முறையில் கொள்ளையடித்த முக்கிய குற்றவாளி கைது!
தமிழகம் முழுவதும் உள்ள பல எஸ்பிஐ வங்கிகளில் நூதன முறையில் கொள்ளையடித்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்.
கடந்த மூன்று நாட்களாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பல டெபாசிட் வசதி கொண்ட எஸ்பிஐ வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் பணம் திருடப்பட்டதாக 19 க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது. மேலும், நேற்று சென்னையில் உள்ள பல எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்களில் இருவர் கொள்ளையடித்துள்ளது கண்டறியப்பட்டது. இதனையடுத்து தற்காலிகமாக டெபாசிட் வசதிகண்ட எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்களில் பணம் எடுக்க தடை விதிக்கப்பட்டது.
இது தொடர்பாக தனிப்பிரிவு மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நூதனமாக ஏடிஎம்மில் இருந்து பணம் திருடிய முக்கிய குற்றவாளி இப்பொழுது கைது செய்யப்பட்டுள்ளான். இவர்கள் ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களை சேர்ந்தவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் 3 பேரை போலீசார் தேடி வருவதுடன், இந்த எஸ்பிஐ ஏடிஎம் கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் எஸ்பிஐ வங்கி அனைத்திலும் பணம் சரியாக உள்ளதா எனவும் சோதனை மேற் கொள்ளுமாறு எஸ்பிஐ வங்கியின் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.