செங்கல்பட்டு விஷ சாராய விவகாரம்.! முக்கிய குற்றவாளி அதிரடி கைது.!
செங்கல்பட்டில் விஷ சாராய விவகாரம் தொடர்பாக முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பலர் மெத்தனால் எனும் விஷ சாரயத்தை அருந்தியுள்ளனர். இதுவரையில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக உயர்ந்து உள்ளது. 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல, செங்கல்பட்டில், போலி மது குடித்து இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனனர். பலர் மருத்துவமணிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விஷ சாராய விவகாரங்கள் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து வருகின்றனர். இதுவரை தனியார் கெமிக்கல் தொழிற்சாலை உரிமையாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விளம்பூர் விஜயகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.