தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளரும், தமிழக காங்கிரசின் முன்னணி செயற்பாட்டாளருமான திரு. கே. பாலசுப்பிரமணியன் (எ) சேலம் பாலு காலமானார்.
இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளரும், தமிழக காங்கிரசின் முன்னணி செயற்பாட்டாளருமான திரு. கே. பாலசுப்பிரமணியன் (எ) சேலம் பாலு அவர்கள் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
தமது இளமைப் பருவம் முதல் மாணவர் காங்கிரசில் இணைந்து, பெருந்தலைவர் காமராஜர் தலைமையை ஏற்று, தேசிய இயக்கத்தின் கொள்கை சார்ந்து தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளில் கொள்கை முனைப்போடு செயல்பட்டு அறிவுசார்ந்த அணுகுமுறையின் மூலம் கட்சியின் வளர்ச்சிக்கு முழுநேரமாக அயராது பாடுபட்டவர்.
கட்சிப் பணியை தமது குறிக்கோளாக ஏற்று வாழ்நாள் முழுவதும் சேவை மனப்பான்மையோடு பணியாற்றிய திரு. சேலம் பாலசுப்பிரமணியன் அவர்களது இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…