மதுரை நகரில் மாயமான மரகத லிங்கம் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடர்பாக இது தொடர்பாக சிலைகடத்தல் காவல்துறையினரின் விசாரணை வளையத்துக்குள் அதிகாரிகள் சிக்கியுள்ளனர்.
காணாமல் போனதாக புகார் கூறப்பட்ட மரகத லிங்கம் மதுரை மீனாட்சியம்மன் கோயில் எதிரே குன்னத்தூர் சத்திரம் அருகில் மாநகராட்சி வரிவசூல் அலுவலகத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கோவிலை பராமரித்து வந்த பூசாரி தொடர்ந்து பூஜை நடந்தி வந்திருந்த நிலையில், மரகதலிங்கம் இருந்த கட்டிடம் ஸ்திரத் தன்மை இழந்ததாகக் கூறி இடித்தபோது, அங்கிருந்த மரகதலிங்கம் உள்ளிட்ட பொருட்கள் மதுரை மாநகராட்சி கருவூலத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இதன்பிறகு அந்த மரகத லிங்கம் மாயமானதாக, புகார் எழுந்தது. இது தொடர்பாக மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதில், மாயமான அந்த மரகத லிங்கம் வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டுள்ளது என்றும், இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், மரகதலிங்கத்தை மீட்டு, மீண்டும் வழிபாட்டிற்கு வைக்க வேண்டுமென அவர் மதுரை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் அவர்கள் முன்னிலையில் அப்போதைய மாநகராட்சி ஆணையர் தினகரன் நேரில் ஆஜராகினார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் சேலம் பகுதியில் பழமையான மரகத லிங்கம் ஒன்றை மீட்டனர்.
இது மதுரையில் மாயமான மரகதலிங்கமாக இருக்கும் என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர். இது குறித்து வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமாரிடம் முதலில் விசாரணையைத் தொடங்கினர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு மதுரை வந்த ஏடிஎஸ்பி ராஜாராமன் தலைமையிலான சிலைகடத்தல் காவல்துறையினர் மாநகராட்சி கருவூல அலுவலகத்திலுள்ள ஆவனங்களை ஆய்வுசெய்தனர். இது தொடர்பான மேலும் விவரங்கள் விசாரனையில் தெரியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
சென்னை : சில தினங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில்…
விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்…
சென்னை : கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) அன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அன்றைய தினமே…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவை கூடியதும் மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் டாக்டர்…
சத்தீஸ்கர் : நடந்து முடிந்த சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர், ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களை மீண்டும்…