காசிமேட்டில் 20 நாட்கள் கடந்தும் இதுவரை மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை.
கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து காசிமேடு நாகூரார் தோட்டம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் தேசப்பன் , கண்ணன் , முருகன் , சிவகுமார், பார்த்திபன், பாபு, லட்சுமணன், ரகு உள்ளிட்ட 10 மீனவர்கள் தங்களுக்கு தேவையான 7 நாட்களுக்கு உணவு பொருட்களை எடுத்துக் கொண்டு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.
இந்நிலையில் 20 நாட்கள் கடந்தும் இதுவரை மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்களின் குடும்பத்தினர் காசிமேடு மீன் துறை உதவி இயக்குனர் வேலன் என்பவரிடம் புகார் அளித்தனர்.
இந்நிலையில் இதனை தொடர்ந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற சென்னை மீனவர்களை கண்டுபிடிக்க புதுச்சேரி ஒடிசா மற்றும் ஆந்திரா அந்தமான் பகுதியில் உள்ள காவல் படையினர் கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மீனவர்களை தேடி வருகின்றனர்.
இலங்கை : இலங்கை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி…
டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால்…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.…
சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில்…