#Breaking:தற்காலிக ஆசிரியருக்கு பதிலாக நிரந்த ஆசிரியர் நியமனம்? – நீதிமன்றம் அதிரடி!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள 13,331 ஆசிரியர் காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள்,பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் அடங்கிய பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் தற்காலிக அடிப்படையில் நியமணம் செய்ய கடந்த வாரம் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.அதன்படி,4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 7,500 ரூபாயிலும்,5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் 3,188 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.12 ஆயிரம் என்ற அடிப்படையில் பணிநியமனங்களை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா,ஏற்கனவே TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஏராளமானோர் வெயிட்டேஜ் முறையால் தற்போது வரை பணி வாய்ப்பு கிடைக்காமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும்,மேலும், தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு உரிய விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில்,தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும் என தமிழக அரசு முறையீடு செய்த நிலையில்,அதற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. இடைக்கால தடையால் மதுரைக்கிளையின் வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியவில்லை என அரசு தரப்பில் வாதிடப்பட்ட நிலையில்,இடைக்கால தடையை நீக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,நிரந்தர ஆசிரியர்களையே நியமிக்கலாமே? என்றும் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க என்ன அவசரம்? எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.இதனையடுத்து,வழக்கை ஜூலை 8 ஆம் தேதி விசாரிப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024![Lokesh Kanagaraj Production Mr Bhaarath Movie promo](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Lokesh-Kanagaraj-Production-Mr-Bhaarath-Movie-promo.webp)
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024![Union Minister Amit shah](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Union-Minister-Amit-shah-5.webp)