டாஸ்மாக் செயல்படும் நேரத்தை அரசு குறைக்கும்.! உயர்நீதிமன்றம் நம்பிக்கை.!
டாஸ்மாக் மதுபான நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே இயங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என மதுரை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் தொடர்பாக வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில், டாஸ்மாக் செயல்படும் நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரையில் 21வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே மது வழங்குவதை உறுதிப்படுத்துவது, மதுபான கடைகளில் மதுவின் தீமைகள் குறித்து விளம்பரங்கள் வைக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர்.
இந்த வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் பொதுமக்கள் நலன் கருதி பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரையில் டாஸ்மாக் இயங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார். மேலும், 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே மது வழங்குவதை அரசு உறுதி செய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.