கல்வி தொலைக்காட்சி டெண்டருக்கு உயர்நீதிமன்றம் திடீர் தடை.! பள்ளிக்கல்வித்துறை பதில் தர உத்தரவு.!

Default Image

தலைமை தொழில்நுட்ப அதிகாரி இல்லாமல் டெண்டர் விட கூடாது என கல்வி தொலைக்காட்சிக்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. 

மாணவர்களுக்கு உபயோகப்படும் வகையில் அரசால் நடத்தப்பட்டு வரும் டிவி சேனல் கல்வி தொலைக்காட்சி. இதில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபடுகின்றன.

கல்வி தொலைக்காட்சிகாக தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட இருந்தது. இதற்கு தடைகேட்டு, மணிகண்ட பூபதி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

அதாவது, கல்வி தொலைக்காட்சியில் தலைமை தொழில்நுட்ப அதிகாரி என்ற ஒருவர் இல்லை. தலைமை தொழில்நுட்ப அதிகாரி இல்லாமல், பொருட்கள் வாங்கினால், அரசுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்படும். முறையாக தொழில்நுட்ப அதிகாரியை நியமித்து, கல்வி தொலைக்காட்சிக்கு என்னென்ன பொருட்கள் வேண்டும் என தீர்மானித்து அதன் பிறகு டெண்டர் கோரப்பட வேண்டும் என அந்த வழக்கில் குறிப்பிட பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அமர்வு, வழக்கின் தன்மையினை ஆராய்ந்து, கல்வி தொலைக்காட்சியில் உரிய தலைமை தொழில்நுட்ப அதிகாரி நியமிக்கபட்ட பின்னரே அவரின் வழிகாட்டுதலின் பேரில் என்னென்ன பொருட்கள் வேண்டும் என உறுதி செய்து பின்னர் டெண்டர் கோரப்பட வேண்டும் என உத்தரவிட்டனர்

மேலும், இந்த வழக்கு குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்