காதல் திருமணம் – கடத்தல் விவகாரம்.! இளம்பெண்ணை பெற்றோருடன் அனுப்ப காவல்துறை எதிர்ப்பு.!

Default Image

கிருத்திகாவை அவரது உறவினர் வீட்டில் தங்க வைக்க தென்காசி காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதுகுறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. 

தென்காசியை அடுத்த கொட்டாகுளத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் வினித் என்பவரும், வல்லம் முதலாளி குடியிருப்பைச் சேர்ந்த மர அறுவை மில் அதிபர் நவீன் படேல் மகள் கிருத்திகாவும் கடந்த மாதம் 20-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தைஅடுத்து கடந்த 25ம் தேதி வினீத் வீட்டிற்கு ஒரு கும்பல் வந்து கிருத்திகாவை வீடு புகுந்து கடத்தி சென்றதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்த சம்பவம் தொடர்பாக தனது காதல் மனைவி கிருத்திகாவை அவர்களது பெற்றோர்கள் கடத்திவிட்டார்கள் அவரை கண்டுபிடித்து தருமாறு ஆட்கொணர்வு மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வினீத் தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது கிருத்திகாவை தென்காசி பெண்கள் காப்பகத்தில் வைத்து மன நல ஆலோசகரிடம் கவுன்சிலிங் கொடுத்து வாக்குமூலம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது .

இந்த உத்தரவை அடுத்து அண்மையில் விசாரணை நடைபெற்ற போது,  கிருத்திகாவை அவரது உறவினரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் பரிந்துரைத்தது. பெற்றோர்கள் தலைமறைவாகி உள்ள காரணத்தால் உறவினர்கள் வீட்டில் தங்க வைப்பது விசாரணைக்கு பாதிப்பாக அமையும் என தென்காசி காவல்துறை நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தது.

இதனை ஏற்று, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தென்காசி காவல்துறைக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்