#Breaking:தமிழக மீனவர்கள் மீது தெளிக்கப்பட்ட கிருமிநாசினி – நீதிமன்றம் கடும் கண்டனம்!

Default Image

மதுரை:இலங்கையில் தமிழக மீனவர்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டது மனிதநேயமற்ற செயல் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழக மீனவர்கள் 68 பேர் எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்கள். இந்நிலையில்,இலங்கையில் தமிழக மீனவர்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டது மனிதநேயமற்ற செயல் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும்,கொரோனா அச்சம் இருப்பின் கிருமிநாசினி தெளித்ததற்கு பதிலாக தமிழக மீனவர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொண்டிருக்கலாம் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

இதற்கிடையில்,68 மீனவர்களும் அவரது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறிய நிலையில்,பொங்கலுக்கு முன் தமிழக மீனவர்களை மத்திய அரசு அழைத்து வரும் என்ற நம்பிக்கை உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

மேலும்,இலங்கை அரசு கைது செய்யும் தமிழக மீனவர்களை கண்ணியம் ,மனிதாபிமானத்துடன் நடத்துவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்