வேங்கைவயல் விவகாரம்.! 2 மாதத்தில் அறிக்கை வேண்டும்.! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!
வேங்கை வயல் சம்பவம் தொடர்பாக தனிநபர் ஆணையம் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கையவயல் எனும் ஊரில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு :
இந்த வழக்கை முதலில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து, தற்போது சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக இன்னும் ஒருவர் கூட கைது செய்யாததை குறிப்பிட்டு திருவள்ளூர் மாவட்டத்தினை சேந்த ராஜ்கமல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
சிபிசிஐடி – சிபிஐ :
இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைவில் கண்டறிய வேண்டும். வழக்கை சிபிசிஐடியிடம் இருந்து மாற்றி சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என கோரி இருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.
தனிநபர் ஆணையம் :
அதில், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக , ஓய்வுபெற்ற நீதிபதி சத்திய நாராயணன் தலைமையில் தனிநபர் ஆணையம் அமைத்து, 2 மாதங்களுக்குள் அந்த ஆணையம் வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என குறிப்பிட்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .