அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுகுழு செல்லும் அதிமுக பொதுக்குழு தீர்மனங்கள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான பிறகு, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பொதுச்செயலாளர் தேர்தல் :
அடுத்ததாக, எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிமுக பொதுச்செயலர் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலையும் எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் , ஜேடிசி பிரபாகரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இருதரப்பு வாதம் :
இந்த வழக்கில் தேர்தலை நடத்தி கொள்ளலாம் ஆனால், நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த முடிவுகளை வெளியிடலாம் என குறிப்பிட்டு, அடுத்தகட்ட விசாரணையில் ஓபிஎஸ் – இபிஎஸ் என இரு தரப்பு வாதங்களையும் நீதிபதி குமரேஷ் பாபு கேட்டுக்கொண்டார்.
தீர்ப்பு :
கடந்த 22ஆம் தேதி 7 மணிநேரம் ஒரே நாளில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டு பதிவு செய்துகொண்ட நீதிபதி குமரேஷ் பாபு, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்தார். இதனை தொடர்ந்து இன்று அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்குகளின் தீர்ப்புகள் வெளியாகும் என தகவல் வெளியாகி இருந்தது.
ஓபிஎஸ் மனுக்கள் தள்ளுபடி :
தற்போது இதன் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்தும், அதிமுக பொதுசெயலாளர் தேர்தல் குறித்தும் ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுக்குழு செல்லும் :
இதன் மூலம் , அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்பதும் உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலும் செல்லும் என்பது உறுதியாகியுள்ளது. அடுத்ததாக அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…