பொதுதேர்ர்வு நேரம்.. ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.! உயர்நீதிமன்றம் அறிவுரை.!
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நலன் கருதி ஒலிபெருக்கி பயன்படுத்த தடை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பங்குனி மாத திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படும் எனவும், அதனால், பொது தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படுவர் எனவும் அதே கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
திருவிழாக்களில் ஒலிபெருக்கி :
அந்த வழக்கில், பொதுத்தேர்வு முடிந்த பிறகு திருவிழாவை நடத்த உத்தரவிட கோரி குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கோவில் திருவிழாக்களில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
பங்குனி மாத திருவிழா :
விழா ஏற்பாட்டாளர்கள் சார்பில் கூறுகையில், இது பங்குனி மாத திருவிழா என்பதால், இந்த பங்குனி மாதத்தில் தான் நடத்த முடியும் எனவும், இதனை தவிர்த்து, வேறு மாதத்தில் நடத்த முடியாது எனவும், பொதுத்தேர்வு சமயத்தில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த மாட்டோம் எனவும் உறுதியளித்தனர்.
ஒலிபெருக்கிக்கு தடை :
இதனை ஏற்று, பொதுத்தேர்வு சமயத்தில் மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக ஏற்கனவே ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கூடாது என ஏற்கனவே உத்தரவு இருப்பதாகவும், அதனை கொண்டு அந்தந்த பகுதி வட்டாட்சியர்கள் இதனை உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
பெற்றோர்களுக்கு அறிவுரை :
மேலும், குறிப்பிட்ட கிராமத்தில், திருவிழா சமயத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தகுந்த சூழலை பெற்றோர்கள் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி, கோவில் நிர்வாகத்தில் வாதத்தை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை முடித்துவைத்தது.