டாஸ்மாக் விவகாரம் : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு.!
மலை பகுதிகளில் காலியான மதுபான பாட்டில்களை திரும்ப பெரும் நோக்கில் தமிழக அரசு அதனை திரும்ப பெரும் மையங்களை உருவாக்கியது. இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள மலைப்பகுதிகளில் உள்ள வளங்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் ஏற்கனவே பிளாஸ்டிக் பாட்டிகள் , பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழ்நாடு மலைப்பகுதிகளில் உயர்நீதிமன்றம் தடை விதித்து இருந்தது. இதனை தொடர்ந்து தமிழக அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ள்ளது.
அதன்படி, மலை பகுதிகளில் டாஸ்மாக் மூலம் விற்கப்படும் மது பாட்டில்களில் காலி மதுபாட்டிகளை திரும்ப பெரும் நோக்கில், அங்கங்கே மையங்களை நிறுவியது தமிழக அரசு. அந்த மையத்தில் காலியான மது பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்களை கொடுத்துவிடலாம். இதன் மூலம் மலை வளம் பாதிக்கப்படும்.
தமிழக அரசின் இந்த முயற்சிக்கு, சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும், இதே திட்டத்தை, கோவை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் செயல்படுத்தி அங்குள்ள மலை வளங்களை பாதுகாக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.