தொலைதூர கல்வியில் பயின்றவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியில்லை.? உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
தொலைதூர கல்வி நிறுவங்களில் பயின்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் நடைமுறையை மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுத்தியுள்ளது.
தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் நேரடி கல்லூரி வகுப்பில் பயிலாதவர்கள் பெரும்பாலானோர் இருக்கிறார்கள் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது .
இதுகுறித்து மேலும் கூறுகையில் , தொலைதூர கல்வி நிறுவனங்களில் பயின்றவர்கள் பெரும்பாலும் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களாக பயின்று வருகின்றனர். இந்த நடைமுறையை மாற்றியமைக்க வேண்டும்.
தொலைதூர கல்வி நிறுவனங்களில் பயின்றவர்கள் ஆசியராக பணியாற்ற தகுதிஇல்லாதவர்கள். அதற்கு பதிலாக நேரடி கல்லூரி வகுப்பில் பயின்றவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களை நியமிக்கும் நடைமுறையை இன்னும் 3 மாத காலத்திற்குள் மாற்றியமைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.