#BREAKING: ஜனவரி 18 முதல் கீழமை நீதிமன்றங்கள் 100% இயங்கும்..!
தமிழகம், புதுவையில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களும் ஜனவரி 18-ஆம் தேதி முதல் முழுமையாக இயங்கும் எனவும், முழுமையான நேரடி விசாரணைகள் நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற நிர்வாக பதிவாளர் அறிவித்துள்ளார்.
வழக்கறிஞர்களுக்கு ஆன்லைன் விசாரணை தேவைப்பட்டால் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நிர்வாகக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக நீதிமன்றங்கள் மூடப்பட்டு வழக்கு விசாரணை ஆன்லைன் மூலம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.