வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மிக கனமழை வாய்ப்பு!

தமிழ்நாட்டில் நவம்பர் 25, 26, 27, 28 ஆகிய 4 நாட்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

rain alert

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று (23-ல் பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 25 ஆம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் எனவும், இது மேலும் இது இரு தினங்களில் வடமேற்கு திசையில் தமிழகம்- இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனவும் முன்னதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது எனவும், நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அடுத்த 2 நாட்களில் தமிழ்நாடு – இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் சமீபத்திய அறிவிப்பில் தகவலை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் மிக கனமழை வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் நவம்பர் 25, 26, 27, 28 ஆகிய 4 நாட்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 12 முதல் 20 செ.மீ வரை மழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

25-ஆம் தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், அரியலூர், சிவகங்கை புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்