டிக் டாக்கில் மலர்ந்த காதல், திருமணத்துக்கு பின் ஜாதி குறுக்கிட்டதால் கருக்கலைப்பு செய்து விரட்டியடிப்பு!
டிக் டாக்கில் மலர்ந்த காதல், திருமணத்துக்கு பின் ஜாதி குறுக்கிட்டதால் கருக்கலைப்பு செய்து விரட்டியடித்த காதலன் மற்றும் குடும்பத்தினர்.
சென்னையிலுள்ள வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், ராணிப்பேட்டை செங்கோடு பகுதியை சேர்ந்த 19 வயது சாந்தகுமார் என்பவருக்கும் டிக் டாக் மூலமாக பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் சிறுமி வீட்டில் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு எழுந்ததால், சிறுமியை வீட்டை விட்டு வெளியே வர சொன்ன சாந்தகுமார் தனது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். மூன்று மாதங்களாக சந்தோஷமாக இருந்த இவர்களுக்கு இடையில் திடீரென சிறுமி கர்ப்பம் ஆனதும் சிறுமி வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் சாந்தகுமார் பெற்றோர் அந்தப் பெண்ணை வெளியே போகும்படி விரட்டியுள்ளனர்.
இந்நிலையில் சாந்தகுமார் தனது பெற்றோருடன் சேர்ந்து 38 வயதான பாஷா எனும் போலி மருத்துவரிடம் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்து வைத்துள்ளனர். அதன் பின்பு சிறுமியை வீட்டைவிட்டு துரத்திவிட்டுள்ளனர். என்ன செய்வதென்று அறியாமல் காட்பாடியில் உள்ள குழந்தை காப்பகத்தில் சென்று சிறுமி தஞ்சம் அடைந்துள்ள நிலையில், காப்பக அலுவலர்களிடம் தனக்கு நடந்ததை பற்றி கூறியதை அடுத்து அவர்கள் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் போலி டாக்டர் பாஷா உட்பட சாந்தகுமார் அவரது உறவினர்கள் 3 பேரை கைது செய்துள்ளனர்.