கலைஞர் நூற்றாண்டு விழா… இன்று முதல் கோலாகல தொடக்கம்.!
கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கான லோகோ இன்று மாலை வெளியிடப்பட உள்ளது.
முன்னாள் தமிழக முதல்வரும், மறைந்த திமுக கட்சி தலைவருமான கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. நாளை, கலைஞர் கருணாநிதிக்கு 99வயது நிறைவடைந்து 100 வயது ஆரம்பிக்க உள்ளது. இதனை முன்னிட்டு நாளை கலைஞர் நூற்றாண்டு விழா துவக்க நாள் என திமுகவினர் கொண்டாட உள்ளனர்.
கலைஞர் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட உள்ள திமுகவினர், அதன் துவக்கமாக இன்று மாலை கலைஞர் நூற்றாண்டு விழா இலச்சினை (லோகோ – Logo) வெளியிட உள்ளனர்.