பேட்டரியில் இயங்கும் புது ரயில் அறிமுகம்… அதிகாரிகளுக்கு பாராட்டு…

Published by
Kaliraj

சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட, அரக்கோணம் ரயில்வே மின்சார லோகோ பணிமனையில், மின்சாரம் மற்றும் பேட்டரியில் இயங்கும், ரயில் இன்ஜின் தயாரிக்கப்பட்டுவருகிறது.மேலும்,  சுற்றுச்சூழல் மாசுபடாமல் இயங்கும் இன்ஜினுக்கு, ‘பசுமை’ என, பெயரும்  வைக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் இன்ஜின், பேட்டரி மூலம் மூன்றரை மணியில் இருந்து, நான்கு மணி நேரம் வரை இயங்கும் எனவும்,  24 பெட்டிகள் வரை இந்த இன்ஜீனுடன் இணைத்து இயக்க முடியும். இந்த இன்ஜின் 1,080 டன் வரை இழுத்து செல்லும் திறன் கொண்டது. மேலும் இது மணிக்கு, 15 கி.மீ., வேகத்தில் இயங்கும். மின்சார ரயில் பாதைகளில் விபத்து காலங்களில், இந்த இன்ஜின் பயன்படுத்தி, ரயில்கள் இயக்க உதவியாக இருக்கும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று, பேசின் பிரிட்ஜ் — சென்டரல் நிலையம் இடையே, 24 பெட்டிகள் இணைக்கப்பட்டு, வெள்ளோட்டம் விடப்பட்டது. இந்த இன்ஜினை தயாரித்த, அரக்கோணம் மின்சார லோகோ பணிமனை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் பாராட்டி, அவர்களுக்கு பரிசும் அறிவித்து உள்ளார்.

Recent Posts

மாமல்லபுரம் அருகே பயங்கர விபத்து! மாடு மேய்த்துக்கொண்டிருந்த 5 பெண்கள் பலி!

மாமல்லபுரம் அருகே பயங்கர விபத்து! மாடு மேய்த்துக்கொண்டிருந்த 5 பெண்கள் பலி!

செங்கல்பட்டு : திருப்போரூர் அருகே கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்த  சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் உள்ள…

9 minutes ago

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது – முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

சென்னை : பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என்றும், அதற்கு மாற்றாக சமூகநீதி அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள…

24 minutes ago

கனமழை எச்சரிக்கை… நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை :  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்கு புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு…

45 minutes ago

மகாராஷ்டிரா முதலமைச்சர் ரேஸில் பின்வாங்கிய ஷிண்டே! பரபரப்பு பேட்டி!

தானே : அண்மையில் நடைபெற்று முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி…

53 minutes ago

7 மணி வரை இந்த 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை :  வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்குள் புயலாக வலுப்பெறும் என…

1 hour ago

ஐசிசி டெஸ்ட் தரவரிசை : மீண்டும் முதலிடம் பிடித்து ஜஸ்பிரித் பும்ரா அசத்தல்!!

மும்பை : இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான 5 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி…

1 hour ago