இளைஞர்களின் உயிர்கள் இனி பறிபோகாமல் தடுக்க முடியும்..! – விஜயகாந்த்

Default Image

இந்த சட்டத்தால் பல இளைஞர்களின் உயிர்கள் இனி பறிபோகாமல் தடுக்க முடியும் என்பதால் தமிழக அரசை பாராட்டுகிறேன் என விஜயகாந்த் ட்வீட். 

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.  இதனையடுத்து, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டமானது. ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 

இந்த நிலையில், இதற்கு தேமுதிக விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், ‘ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யவும், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தவும் முடிவு செய்து தமிழக சட்டசபையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இதனை தேமுதிக சார்பில் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு இளைஞர்கள் பலர் அடிமையாகி பொருளாதார நெருக்கடியை சந்தித்ததோடு உயிரிழப்பு போன்ற சம்பவங்களும் அரங்கேறி வந்தது. தற்போது இந்த சட்டத்தால் பல இளைஞர்களின் உயிர்கள் இனி பறிபோகாமல் தடுக்க முடியும் என்பதால் தமிழக அரசை பாராட்டுகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்