56 நிமிடங்களில் 48 வகையான உணவுகளை சமைத்து சாதனை படைத்த சிறுமி!

Default Image

58 நிமிடங்களில் 46 வகையான பாரம்பரிய உணவுகளை சமைத்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சிறுமி லட்சுமி சாய் ஸ்ரீ.

லட்சுமி சாய் ஸ்ரீ என்ற சிறுமி சென்னையில் நடைபெற்ற ஒரு போட்டியில் கலந்துகொண்டு, 58 நிமிடங்களில் 46 வகையான பாரம்பரிய உணவுகளை சமைத்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தனது அவருக்கு சமையலில் ஆர்வம் உள்ளதாகவும், நான் எனது தாயிடமிருந்து சமையல் கற்றுக் கொண்டேன் என்றும், இந்த சாதனையை நான் அடைந்தது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.’ என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து லட்சுமியின் தாயார் கூறுகையில், ஊரடங்கு காலத்தில் எனது மகள் நன்றாக சமைக்கத் தொடங்கினாள். நான் தமிழ்நாட்டின் வெவ்வேறு பாரம்பரிய உணவு வகைகளை சமைக்கிறேன். கொரோனா காலகட்டத்தில் என் மகள் என்னுடன் சமயலறையில் நேரத்தை செலவழித்தார். என் கணவருடன் சமைப்பதில் அவள் ஆர்வத்தைப் பற்றி பேசினேன், அவர் உலக சாதனை முயற்சி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.’ எனக் கூறியுள்ளார்.

இதனை அடுத்து, நாங்கள் இதுகுறித்து முடிவெடுத்து இந்த சாதனை செய்வதற்கான வழியை ஆயத்தப்படுத்தினோம். லட்சுமியின் தந்தை இதுகுறித்து கூறுகையில், கேரளாவை சேர்ந்த என்ற சான்வி என்ற 10 வயது சிறுமி சுமார் 30 உணவுகளை சமைத்து சாதனை படைத்தார். இதனால் தனது மகள் சான்வியின் சாதனையை முறியடிக்க வேண்டும் என விரும்பினார்.’ என அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்