பாஜக வேட்பாளர் பட்டியலே இன்னும் வெளியாகல., ஆனா வேட்புமனு தாக்கல் செய்த நயினார் நாகேந்திரன்.!

Default Image

பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக பாஜக மாநில தலைவர் எல் முருகன் தலைமையை சந்திக்க டெல்லி சென்றுள்ளார். ஆகையால், பாஜகவின் வேட்பாளர் பட்டியல் இன்று இரவு அல்லது நாளை கண்டிப்பாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் இன்று காலை சரியாக 11 மணியளவில் தொடங்கியது. வரும் 19ம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சனி, ஞாயிறை தவிர வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், வேட்பு மனு தாக்கல் தொடங்கியதா அடுத்து, பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாஜக மாநில துணைத்தலைவருமான நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்தார்.

வெற்பு மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், பாஜக சார்பாக இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன். 5வது முறையாக இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன். தொகுதிக்கு கொண்டு வந்த திட்டங்களை சொல்லி வாக்கு சேகரிப்பேன். பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே வேட்பு மனுதாக்கல் செய்ததற்கு நல்ல நேரம் தான் காரணம் எனக் கூறியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு, திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவன்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம்விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி தனி, கோவை தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, தளி, காரைக்குடி, தாராபுரம் தனி, மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்