உழைப்பே உயர்வு என்பதற்கு வெங்கய்ய நாயுடுவின் வாழ்க்கையே உதாரணம்-முதலமைச்சர் பழனிசாமி

இன்று சென்னையில் துணை குடியரசு தலைவராக வெங்கையா நாயுடு 2 ஆண்டுகளில் செய்த ஆவணப்படுத்தும் வகையில் “கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்” என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக உள்துறை அமைச்சர் அமித் ஷா,பிரகாஷ் ஜவடேகர்,தமிழக ஆளுநர்,முதலமைச்சர் பழனிசாமி,துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.புத்தகத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார்.
இந்த விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், உழைப்பே உயர்வு என்பதற்கு வெங்கய்ய நாயுடுவின் வாழ்க்கையே உதாரணம்.தமிழகத்தின் திட்டங்களுக்கு மத்திய அரசின் உதவியை பெற்று தருபவர் வெங்கய்ய நாயுடு என்று முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.