நூலகம் அறிவுக்கோயில்! அதன் மீது இவ்வளவு அலர்ஜி ஏன்? – சு.வெங்கடேசன்

M.P venkatesan Neet

மதுரையில் சுமார் ரூ.206 கோடி மதிப்பில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை கடந்த ஜூலை 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நூலகம் 8 தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, மதுரை கலைஞர் நூலகம் குறித்து அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர். இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், மதுரையில் நூலகம் வேண்டுமென்று மாணவர்களோ இளைஞர்களோ யாரும் கேட்கவில்லை என கூறியிருந்தார்.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாருக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவரது பதிவில், “மதுரையில் நூலகம் வேண்டுமென்று மாணவர்களோ இளைஞர்களோ யாரும் கேட்கவில்லை”என்று திரு. உதயகுமார் சொல்கிறார். புத்தகம் கேட்கிற பிள்ளைகள் எல்லோர் வீட்டிலும் இருக்கிறார்கள். அதிமுகவினர் வீட்டில் மட்டும் இல்லையா உதயகுமார் அவர்களே! நூலகம் அறிவுக்கோயில்! அதன் மீது இவ்வளவு அலர்ஜி ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்