ஆன்லைன் மூலமாக இல்லை , டிவி மூலமாக தான் பாடம் – அமைச்சர் செங்கோட்டையன்

Published by
Venu

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்-லைன் வழி கல்வி கற்பிக்கப்படும் என நேற்று கூறியிருந்த நிலையில் இன்று மறுப்பு தெரிவித்துள்ளார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால்,பள்ளிகள்திறக்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மாணவர்களின் நலன்கருதி பல பள்ளி நிர்வாகம், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.ஏற்கனவே தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.இதனோடு மட்டுமின்றி பொதுத்தேர்வு எழுதவுள்ள அனைத்து மாணவர்களும் தாங்கள் பெற்ற காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி அடைய செய்யப்படுவார்கள் எனவும் அரசு அறிவித்தது.

இதனிடையே  ஜூலை 13-ஆம் தேதிக்கு  பிறகு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று கூறினார். தனியார் பள்ளிகள் போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் கற்பிக்கப்படும்.மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன்  வகுப்புகளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில்   தமிழகத்தில் ஆன்-லைன் வழி கல்வி இல்லை – டிவி மூலம் பாடம் கற்பிக்க திட்டம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…

1 hour ago

‘நாயகன் மீண்டும் வரார்’….அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு தட்டித் தூக்கிய சிஎஸ்கே!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…

4 hours ago

சாஹலை ரூ.18 கோடிக்கு எடுத்த பஞ்சாப்! ஆசை வைத்து வேதனையடைந்த சென்னை!

ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…

6 hours ago

அனல் பறந்த பிட்டிங்..! கே.எல்.ராகுலை 14 கோடிக்கு எடுத்த டெல்லி அணி!

ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…

6 hours ago

“இவரை நாங்க வச்சுகிறோம்”…10 கோடிக்கு ஷமியை தூக்கிய ஹைதராபாத்!

ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…

7 hours ago

10 நிமிடத்த்தில் வரலாற்றை மாற்றினார் ‘ரிஷப் பண்ட்’! ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…

7 hours ago