கண்ணியக் குறைவை தலைமை ஒருபோதும் ஏற்காது – மு.க.ஸ்டாலின் அதிரடி அறிக்கை

Published by
பாலா கலியமூர்த்தி

கண்ணியக் குறைவான சொற்களை வெளிப்படுத்துவதைக் திமுக தலைமை ஒருபோதும் ஏற்காது என்று முக ஸ்டாலின் அறிக்கை.

திமுக எம்.பி ஆ.ராசா, ஆயிரம் விளக்குத் தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனுக்கு ஆதரவாக நேற்று பிரசாரம் மேற்கொண்டபோது, முதல்வரை பற்றி தரக்குறைவாக பேசியதாக வீடியோ இணையத்தில் வைரலானதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆ.ராசாவின் பேச்சுக்கு திமுக மகளிரணி தலைவி கனிமொழி எம்.பி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி தேர்தல் பிரசாரத்தில் தரக்குறைவாக பேசி வரும் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இனிவரும் காலங்களில் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபடாத வகையில் நிரந்தர தடை விதிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகாரளித்திருந்தது.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பரப்புரை செய்யும்போது மரபையும், மாண்பையும் மனதில் வைத்துச் செயல்பட வேண்டும். வெற்றிக்கு முன், வெற்றிக்கான பாதையும் முக்கியமானது என்றும் பேரறிஞர் அண்ணா வலியுறுத்திய கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய மூன்றில், பேச்சாளர்களின் முதன்மை அம்சமாக இருக்க வேண்டியது கண்ணியமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கண்ணியக் குறைவான சொற்களை வெளிப்படுத்துவதைக் கழக தலைமை ஒருபோதும் ஏற்காது என தெரிவித்துள்ளார். திமுகவினர் பேச்சுகளைத் திரித்து, வெட்டி – ஒட்டி, தவறான பொருள்படும்படி செய்து வெற்றியைத் தடுக்க நினைத்து மூக்குடைபட்டவர்கள், இப்போதும் தோல்வி பயத்தால் மீண்டும் அதே பாணியை மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்களது எண்ணம் நிறைவேறாத வகையில், கவனத்துடன் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, முதல்வரை பற்றி தனிப்பட்ட முறையில் நான் விமர்சிக்கவில்லை. எனது பேச்சை வெட்டியும், ஒட்டியும் சமூக வலைத்தளங்களில் தவறாக பரப்பப்படுகிறது. திமுக தலைவர் முக ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி இருவரையும் அரசியல் குழந்தையாக ஒப்பிட்டு பேசியதை வெட்டி, ஒட்டி பரப்புகின்றனர். முதல்வரின் மாண்புக்கு சேதம் விளைவிக்கும் வகையில் எந்த கருத்தையும் கூறவில்லை என ஆ.ராசா விளக்கமளித்திருந்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மிக கனமழை வாய்ப்பு!

வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மிக கனமழை வாய்ப்பு!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…

15 minutes ago

“முறைகேடான விதத்தில் பாஜக கூட்டணி வெற்றி”! விளக்கம் கேட்கும் திருமாவளவன்!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…

30 minutes ago

IPL Auction : களைகட்டப் போகும் சவுதி..! இன்று தொடங்கும் ஐபிஎல் ஏலம்..!

சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…

41 minutes ago

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

16 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

17 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

17 hours ago