சந்தி சிரித்த பின் சந்திக்கிறேன் என்கிறார் கவிஞர்…! தமிழிசை சவுந்தரராஜன் ட்வீட்

Published by
Venu

வைரமுத்து விளக்கம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
13 வருடங்களுக்கு முன்பு ஸ்விசர்லாந்தில் ஈழத்தமிழர்களுக்காக நடைபெற்ற ‘வீழமாட்டோம் ‘ என்ற விழாவிற்கு சென்றிருந்தோம். விழா நிறைவு பெற்றதும் சின்மயி வைரமுத்து அறைக்கு சென்று அவரை பார்க்க அழைத்துள்ளனர்.
Related image
ஒத்துழைக்காவிட்டால் சினிமாவில் உங்களது கேரியர் இருக்காது என்று கூறியுள்ளனர்.கோபம் அடைந்த சின்மயி அப்படிப்பட்ட கேரியர் தேவை இல்லை என்று வந்துவிட்டாராம்.வைரமுத்து பற்றி இவர் தெரிவித்த கருத்து தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தன் மீதான பாலியம் புகார் குறித்து வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டில், ‘அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.’ என தெரிவித்தார்.வைரமுத்துவின் பதிவிற்கு ‘பொய்யன்’ என சின்மயி பதிலளித்தார்.
இதேபோல் சமூக வலைதளமான பேஸ்புக் மூலமாக சின்மயி, சிறுவயதில் ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் துன்புறுத்தல் நடந்திருக்கிறது.metoo மூலம் தற்போது ஆண்களும் தாங்கள் சந்தித்த பிரச்னைகளை கூற தொடங்கியுள்ளனர் .அதேபோல் வைரமுத்து தவறாக நடந்துகொண்டார் என கூறுவதற்கு சக பாடகிகள் பலருக்கு தயக்கம் உள்ளது .வைரமுத்து மீது நான் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை .என் திருமணத்திற்கு தொடர்பாளர்கள் மூலம்தான் வைரமுத்துவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது.பாலியல் துன்புறுத்தல் செய்தவர்கள்தான் வெட்கப்பட வேண்டும். நான் வெட்கப்பட மாட்டேன் என்றும் சின்மயி தெரிவித்தார்.

பாடகி சின்மயி பாலியல்குற்றச்சாட்டு தொடர்பாக கவிஞர் வைரமுத்து வீடியோ பதிவுமூலம் விளக்கம் அளித்தார்.அவர் கூறுகையில், பாடகி சின்மயி குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய்யானது.வழக்கு தொடுத்தால் சந்திக்க தயாராக உள்ளேன். சின்மயி புகார் பொய்யானது என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரங்களை தொகுத்து திரட்டி வைத்திருக்கிறேன் என்றும் கவிஞர் வைரமுத்து வீடியோ பதிவுமூலம் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் வைரமுத்து விளக்கம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அவர் பதிவில், சந்தி சிரித்த பின் சந்திக்கிறேன் என்கிறார் கவிஞர். நிந்திக்க அவகாசம் கொடுத்து ஒரு வாரம் கழித்து சிந்திக்க வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பிய அவர்  சந்தக்கவிஞர் மீது சந்தேகமே அதிகரிக்கிறது என்றும்  ட்வீட் செய்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

சிபிஎம் மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு!

சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…

5 hours ago

ரெடியா மாடுபிடி வீரர்களே? ஜல்லிக்கட்டு முன்பதிவு நாளை தொடக்கம்!

சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…

5 hours ago

ஜன.11 இல் இந்த 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…

6 hours ago

ஆபாச நடிகை வழக்கு : ஜனவரி 10 டொனால்ட் டிரம்ப்க்கு தண்டனை..நீதிமன்றம் அறிவிப்பு!

அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில்,  புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…

7 hours ago

குஜராத்: இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து… 3 பேர் பலி!

குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…

9 hours ago

தமிழகத்தில் திங்கள்கிழமை (06/01/2025) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…

9 hours ago