மறைந்த எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா இல்லை – மருத்துவமனை

மறைந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் எம்.ஜி.எம் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன் எஸ்.பி.பியின் உடல்நிலை குணமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறப்பட்டது. இந்நிலையில், 50 நாட்களுக்கு மேலாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று காலமானார்.
இந்நிலையில், மறைந்த எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவருக்கு கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி பரிசோதனை செய்ததில் நெகடிவ் என்று வந்தது. ஆனால் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு நுரையீரல் பாதிப்பு காரணமாக இன்று காலமானார் எனவும் மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எஸ்.பி.பி உடல் நாளை காலை வரை, சென்னையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படும். மருத்துவமனையில் இருந்து எஸ்.பி.பி உடல் இன்று மாலை 4:30 மணிக்கு வீட்டிற்கு எடுத்து செல்லப்படுகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!
April 18, 2025