மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க தடை இல்லை
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கு தடை விதிக்க கோரி ரவி என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார், இந்த மனுவை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளியே என்றும் அவர் மரணமைடைந்ததால் அவர் மீதான தண்டனை அறிவிக்கப்படவில்லை என்றும் கூறியிருந்த ரவி, ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில் அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி அவர்கள், இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி ரவியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.