மறைந்த அதிமுக கழக அவை தலைவர் மதுசூதனன் – அதிமுக தலைமை இரங்கல் தீர்மானம்..!

Default Image

மறைந்த அதிமுக கழக அவை தலைவர் மதுசூதனன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று அதிமுக சார்பில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியன்று உடல்நலக்குறைவால் காலமானார்.இதற்கிடையில்,உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் இன்றும், நாளையும் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில்,இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது மறைந்த அதிமுக கழக அவை தலைவர் மதுசூதனன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று அதிமுக சார்பில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும்,இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாவீரர்:

“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மகத்தான மக்கள் தொண்டரையும், புரட்சித் தலைவர் மீது மாறாப் பற்றுகொண்ட மாவீரரையும் இழந்திருக்கிறது.

இறுதி நிமிடம் வரை:

இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நம்பிக்கைக்கும், மரியாதைக்கும் உரியவராய், புரட்சித் தலைவி அம்மா அவர்களது வாழ்வில் இறுதி நிமிடம் வரை உறுதுணையாக இருந்தவர் கழக அவைத் தலைவர் மரியாதைக்குரிய இ. மதுசூதனன் அவர்கள்.

எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம்:

1953-ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தினைத் தொடங்கி, அதனைத் தொடர்ந்து வட சென்னை பகுதியில் எம்.ஜி.ஆர். பெயரில் மன்றங்களை அமைத்து, சிறுவர்கள் படிக்கும் வண்ணம் எம்.ஜி.ஆர். பெயரில் இரவு பாடசாலைகளைத் தொடங்கி, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த கழக உடன்பிறப்புகள் அனைவராலும் “அஞ்சா நெஞ்சன்” என்று கம்பீரத்தோடு அழைக்கப்பட்ட இ. மதுசூதனன் அவர்கள், வட சென்னை மாவட்டக் கழகச் செயலாளர், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர், கழக கொள்கை பரப்புச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு கழகப் பொறுப்புகளில் பணியாற்றி உள்ளதோடு; சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், அமைச்சராகவும் மிகச் சிறந்த முறையில் மக்கள் பணியாற்றியவர்.

கழகம் என்னும் ஆலமரம்

மதுசூதனன் அவர்கள் ஆற்றிய பணிகள், கழகம் என்னும் ஆலமரம் வேர் விட்டு வளர, ஊற்றப்பட்ட கொள்கை நீராகும் என்பதை பெருமிதத்துடன் நினைவு கொள்கிறோம்.

காலமெல்லாம் எடுத்துக்காட்டு:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கட்டிக் காப்பதிலும், தொண்டர்களுக்காக வாழ்வதிலும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில் நடைபோட்டு, மக்கள் தொண்டாற்றுவதிலும், நம் ஒவ்வொருவருக்கும் கழக அவைத் தலைவர் திரு. இ. மதுசூதனன் அவர்கள் காலமெல்லாம் எடுத்துக்காட்டாய்த் திகழ்வார் என்பது உறுதி.

அஞ்சலி:

கழகத்தின் மூத்த முன்னோடி, போற்றுதலுக்குரிய தலைவர் மதுசூதனன் அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, இந்த இரங்கல் தீர்மானத்தை உளம் உருக நிறைவேற்றுகிறோம்.

கழக அவைத் தலைவர் திரு. இ. மதுசூதனன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் மவுனம் காத்தனர்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 24 01 2025
Donald trump
Seeman - Thirumavalavan - LTTE leader Prbakaran
Earthquake in Myanmar
Academy Awards 2025
bussy anand