நான் இன்னும் அதிகமான பலத்துடன் மீண்டும் வருவேன். யாரும் கவலைப்படாதீர்கள். என்னுடைய விளையாட்டு என்னை விட்டு போகாது. – உயிரிழந்த மாணவி பிரியாவின் கடைசி வாட்சப் ஸ்டேட்டஸ்.
சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரது மகள் பிரியா, கால்பந்தாட்ட வீராங்கனையாக இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விளையாடும் போது காலில் அடிபட்டதன் காரணமாக பெரியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன் பின்னர் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் மாணவியின் கால் வீங்கியதை அடுத்து, ரஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவரது கால் அகற்றப்பட்டுள்ளது. அதன் பின்னர் இன்று காலை மாணவி பிரியா உயிரிழந்துள்ளார்.
இதில் பிரியாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு சார்பில் நிவாரண தொகையும் அறிவித்துள்ளது.
இந்நிலையில், மாணவி பிரியா தான் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் தனது செல்போனில் வைத்த வாட்சாப் ஸ்டேட்டஸ் என்று ஒரு இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், நான் இன்னும் அதிகமான பலத்துடன் மீண்டும் வருவேன். யாரும் கவலைப்படாதீர்கள். என்னுடைய விளையாட்டு என்னை விட்டு போகாது . நான் மீண்டும் வருவேன் என நம்பிக்கையோடு இருங்கள். என அதில் குறிப்பிட்டுள்ளார் மறைந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…