மறைந்த தமிழறிஞர் அவ்வை நடராஜன் அவர்களின் இறுதி சடங்கு , காவல் துறை மரியாதையுடன் மயிலாப்பூர் மயானத்தில் நடைபெற்றது.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் பிரபல தமிழறிஞருமான அவ்வை நடராஜன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக நேற்று சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார். அவரது இறப்புக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை அண்ணாநகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மேலும் , பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் நேரில் வந்தும், இணையம் வாயிலாகவும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாய் கொண்டுவரப்பட்டு மயிலாப்பூர் மயானத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு தமிழக காவல்துறை சார்பில் அவருக்கு இறுதி மரியாதை கொடுக்கப்பட்டது . இந்த இறுதி சடங்கில், அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக எம்.பி ஜெகத்ரட்சகன், பாடலாசிரியர் வைரமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர். அவ்வை நடராஜன் உடலை மயானத்திற்குள் பாடலாசிரியர் வைரமுத்து மற்றும் எம்பி ஜெகத்ரட்சகன் ஆகியோர் சுமந்து சென்றனர். பின்னனர் அவ்வை நடராஜன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…