கொரோனா பாதிப்பால் உயிரிழந்த தாசில்தாரின் கண்கலங்க வைக்கும் கடைசி முகநூல் பதிவு!
கொரோனா பாதிப்பால் உயிரிழந்த தாசில்தாரின் கண்கலங்க வைக்கும் கடைசி முகநூல் பதிவு.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் மற்றும் அதிகாரிகள், மருத்துவர்கள் என அனைவருமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கவியரசு (46). இவருக்கு திருமணமாகி 8 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், விருத்தாசலத்தில் தாசில்தாராக பணியாற்றி வருகிறார். அவர் பணியாற்றிய பகுதியில், கொரோனா தடுப்பு பணியில் மிகவும் தீவிரமாக ஈடுபட்ட இவர், அப்பகுதி மக்கள் மத்தியில், பாசத்திற்கும் நேசத்திற்கும் உரிய அதிகாரியாக திகழ்ந்து வந்தார்.
இந்நிலையில், இவருக்கு கடந்த 10ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவர் உயிரிழப்பதற்கு முன்பதாக தனது முக நூல் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய விருதை வட்ட வாழ் பெருங்குடி மக்களே! என் மேல் எப்போதும் பாசமழை பொழியும் ஊடக நண்பர்களே! எப்போதும் அன்பு பாராட்டும் காவல் அலுவலர்களே! எனது இரண்டாண்டு வருவாய் வட்டாட்சியர் பணியில் உடன் பயணித்த எனது பாசமிக்க கிராம நிர்வாக அலுவர்களே! அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலர்களே! வருவாய ஆய்வாளர்களே ! கிராம உதவியாளர்களே ! உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை சிரம் தாழ்த்தி சமர்ப்பித்துக்கொள்கின்றேன். COVID-19 symptoms காரணமாக தற்போது சிதம்பரம் RMMCH மருத்துமனையில் சிகிச்சையில் உள்ளதால் வருவாய் வட்டாட்சியர் பணியில் இருந்து விலகி விடைபெருகின்றேன்! சிறப்பு நன்றிகள் எனது ஈப்பு ஓட்டுனர் பாலு ஒரு சகோதரனைப்போல இதுகாறும் எனை பாதுகாத்தாய் ! மீண்டும் மீண்டு வந்து அனைவருக்கும் நன்றி சொல்வேன் என்ற நம்பிக்கையுடன்!’ என்று பதிவிட்டுள்ளார்.
இவர் தற்போது உயிரிழந்துள்ள நிலையில், இவருக்கு மக்கள், அவரது முகநூல் பக்கத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.