பயிர் காப்பீடு செய்ய இன்று கடைசி நாள்…!இரவு 12 மணி வரை பொதுசேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை திறந்து வைக்க உத்தரவு …!
புயல் பாதித்த மாவட்டங்களில் இன்று இரவு 12 மணி வரை பொதுசேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை திறந்து வைக்க என்று வேளாண்மைத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர்,புதுக்கோட்டை ,திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர்.
புயலின் பாதிப்பில் சரியாக மீட்புப்பணி , நிவாரணம் வராத நிலையில் மக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வேளாண்மைத்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.அதில் பயிர் காப்பீடு செய்ய இன்று கடைசி நாள் ஆகும்.எனவே புயல் பாதித்த மாவட்டங்களில் இன்று இரவு 12 மணி வரை பொதுசேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை திறந்து வைக்க வேண்டும் என்று வேளாண்மைத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.