குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது..!

Default Image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

இந்த திருவிழா இன்றிலிருந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. இன்று கொடியேற்றம் நடைபெற்றதும். லட்சக்கணக்கான பக்தர்கள் காப்புக்கட்டி கொள்வார்கள். 8-ம் தேதி நடைபெற உள்ள சூரசம் ஹார நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்டத்தில் இருந்து வருவார்கள்.

திருமண தடை , குழந்தை பெற வேண்டி என பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை  விநாயகர் , குறவன், குறத்தி, போலீஸ் , பைத்தியம் என பல விதமான வேடங்கள் அணிந்து கொள்வார்கள். வேடமணிந்த பக்தர்கள் பொதுமக்களிடம் சென்று தர்மம் எடுப்பார்கள். இந்த பத்து நாட்களில்  எடுத்து  தர்மத்தை சூரசம் ஹார முடிந்த மறுநாள் உண்டியலில் சேர்த்து விடுவார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்