கொரோனாவில் இருந்து மீண்ட கொங்கு மண்டலம்.!

Default Image

ஈரோடு, திருப்பூர் கோவை, நாமக்கல், சேலம் ,சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது.

3-ம் கட்ட ஊரடங்கு வரும் 17-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், நேற்று முன்தினம் பேசிய பிரதமர் மோடி 4-ம் கட்ட ஊரடங்கு முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும் என தெரிவித்தார். இந்நிலையில், சென்னை மற்றும் கோயம்பேடு மார்க்கெட் மூலமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று மேலும் 509 பேருக்கு உறுதி செய்யப்பட்டதால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,227 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று 380 பேருக்கு உறுதிசெய்யப்பட்டதால் அங்கு மொத்த எண்ணிக்கை 5262 ஆக உயர்ந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட் மூலமாக சென்னை, கடலூர், அரியலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும், தமிழகத்தில்  கொரோனா இல்லாத மாவட்டமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆக உயந்தது.

சிவகங்கை, ஈரோடு, திருப்பூர் கோவை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திருப்பி உள்ளனர். இதனால் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது. இந்நிலையில், கடந்த 21 நாட்களாக புதிதாக கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக சேலம் உள்ளது. சேலத்தில் 35 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதில், 30 பேர் வீடு திரும்பினர். 5 பேர்   சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கொங்கு மண்டலத்தில் ஈரோடு, திருப்பூர் கோவை, நாமக்கல், சேலம் போன்ற மாவட்டங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்