ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் கடந்த 10-ஆம் தேதி வெளியாவதற்கு முன்பு 9-ஆம் தேதியே ஒரு வார ஆன்மீக பயணமாக திட்டமிட்டு ரஜினிகாந்த் இமயமலை சென்றார். இந்த ஆன்மீக பயணத்தின் போது, பத்ரிநாத், துவாரகா, ரிஷிகேஷ், பாபா குகை உள்ளிட்ட சில முக்கியமான இடங்களுக்கு சென்றார்.
உத்தரப் பிரதேசத்தில் சிறப்பு காட்சியாக வெளியிடப்பட்ட ஜெயிலர் படத்தை நடிகர் ரஜினி, அம்மாநில துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியாவுடன் பார்த்தார். அதன்பின், ரஜினி உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார். அப்போது யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.
இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள், தமிழ்நாட்டு மக்கள் நடிகர் ரஜினியை எவ்வளவு உயர்வாக நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை ஒரு நிகழ்வில் காட்டிவிட்டீர்கள்; பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. இப்படிப்பட்டவர்களிடம் இருந்து ஒட்டுமொத்த இந்தியாவையும் காப்பாற்ற வேண்டும். ரஜினி கட்சி ஆரம்பித்து ஆட்சி அமைத்திருந்தால் யோகி ஆட்சி போல்தான் இருந்திருக்கும் என விமர்சித்துள்ளார்.
சென்னை : தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளில் உழவர்களின் நண்பனாக திகழும்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரம்…
தெலுங்கானா : மாநிலம் ஹைதராபாத் - வாரங்கல் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்து சம்பவத்தில் 2…
பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள்…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'வணங்கான்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…
டெல்லி : அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8…