தி கேரளா ஸ்டோரி சர்ச்சை: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்.!
தமிழ்நாட்டில் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் திரையிடப்படவில்லை என தமிழக அரசு பதிலளித்துள்ளது.
தி கேரளா ஸ்டோரி பட காட்சிகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தயாரிப்பாளர் விபுல்ஷா உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பதிலளித்த தமிழக அரசு, “திரைப்படத்தை அரசு தடை செய்யவில்லை. திரையரங்குகளே திரையிட முன்வரவில்லை” என குறிப்பிட்டுள்ளது.
சர்ச்சைகளுக்கு மத்தியில் 100 கோடி வசூல்:
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான ‘தி கேரளா ஸ்டோரி ‘திரைப்படம் வசூல் ரீதியாக பல கோடிகளை அள்ளி வருகிறது. கடந்த 5-ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் 100 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பிரபல அரசியல் கட்சிகள் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் திரையிட மறுப்பு:
அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும், சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என காரணங்களை குறிப்பிட்டு, தமிழகத்தில் பட விநியோகிஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் வெளியிட மறுத்தது.
தமிழக அரசு விளக்கம்:
மாநிலங்களில் படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என கோரி தி கேரளா ஸ்டோரி படக்குழு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மக்களிடம் வரவேற்பு இல்லாததால் திரையரங்குகளே படத்தை திரையிடுவதை நிறுத்திவிட்டனர் என்றும் திரைப்படத்தை அரசு தடை செய்யவில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.
தி கேரளா ஸ்டோரி:
இந்த படத்தை இயக்குனர் லதா சீனிவாசன் எழுத, இயக்குனர் சுதிப்தோ சென்னின் இயக்கியுள்ளார். படத்தில் ஆதா ஷர்மா, யோகிதா பிஹானி, சித்தி, சோனியா பாலா, தேவதர்ஷி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.