கத்திரி வெயில் முடிந்தும்.. 7 மாவட்டங்களை வெயில் வாட்டியெடுத்துள்ளது.!
தமிழகத்தில் கடந்த மே 28-ம் தேதியுடன் கத்திரி வெயில் நிறைவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் சில மாவட்டங்களில் மழை பொழிந்துள்ளது இதனால் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் அந்தமாநிலத்தில் பக்கத்திலுள்ள பகுதியில் வெயில் குறைந்தது மழைப்பொழிவு தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் தற்போது கத்திரி வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. அந்தவகையில் இன்னும் தமிழகத்தில் பல இடங்களில் வெயில் தாக்கம் இன்னும் குறையவில்லை. தமிழகத்தில் நேற்று 7 இடங்களில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. அதன்படி திருத்தணி,வேலூர்,சென்னை மீனம்பாக்கம்,நுங்கம்பாக்கம்,மதுரை திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகிறது