காஷ்மீர் விவகாரத்தை கண்டித்து விரைவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்தது .மேலும் காஷ்மீர் இரண்டு மாநிலமாக பிரிக்கப்படும் என்று தெரிவித்தது. இது தொடர்பான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து மக்களவையிலும் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது
இந்த நிலையில் மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், காஷ்மீர் விவகாரத்தை கண்டித்து விரைவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம், விரைவில் தேதி அறிவிக்கப்படும்.
மேலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்தில் மத்திய – மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…