தமிழகத்தை உலுக்கிய கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு! சிபிஐக்கு மாற்றம்!
கள்ளக்குறிச்சியில் விஷ சாராய வழக்கு விசாரணை சி.பி.ஐக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி : கடந்த ஜூன் மாதம் கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 60 பேர் விஷச்சாராய அருந்தி உயிரிழந்தனர். கடந்த ஜூன்-19ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தி 229 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை அதிமுக, பாஜக, பாமக கட்சிகள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அமர்வு தற்போது இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றியமைத்துள்ளது.
மேலும், இந்த வழக்கு தொடர்பான வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிஐ காவல்துறையிடம் ஒப்படைக்க தமிழக காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக காவல்துறையும் இந்த சி.பி.ஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.