kalaignar 100 function [File Image]
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு ஆண்டு விழாவை திரைத்துறை சார்பில் திரைபிரபலன்கள் முன்னெடுத்து பிரமாண்டமாக அடுத்த ஆண்டு ஜனவரி 6 (06.01.2024) தேதி நடத்தவுள்ளார்கள். விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ள காரணத்தால் சென்னை, சேப்பாக்கத்தில் வைத்து நடத்தினால் சரியாக இருக்கும் என திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், தற்போது அந்த இடத்தில் நடைபெறாது எனவும் அதற்கு பதிலாக வேறு மைதானத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏனென்றால், சென்னை, சேப்பாக்கத்தில் ரஞ்சிக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. அது மட்டுமின்றி, இந்த நிகழ்ச்சியை நடத்த தேவையான இடவசதிக்காகவும் புதிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, கலைஞர் 100 விழா சென்னை, சேப்பாக்கத்தில் இருந்து கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
‘கலைஞர் 100’ நிகழ்ச்சிக்கு விஜய் – அஜித்துக்கு நேரில் அழைப்பு விடுப்பு.?
இந்த விழா மிகவும் பிரமாண்டமாக இருக்கவேண்டும் என்பதால் ரஜினிகாந்த் மற்றும் கமல் என தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவை கலந்து கொள்ளவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், அமிதாப் பச்சன், மோகன் லால், சிவராஜ் குமார், சிரஞ்சீவி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே கருணாநிதியின் நூற்றாண்டு ஆண்டு விழா சென்னை, சேப்பாக்கத்தில் டிசம்பர் 24-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. அதன்பிறகு மிக்ஜாம் புயல், வெள்ள நிவாரணப் பணிகள் காரணமாக தேதி ஒத்திவைக்கப்படுவதாகவும் அடுத்த ஆண்டு ஜனவரி 6 (06.01.2024) தேதி நடக்கும் எனவும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த இரண்டு தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. இதனிடையே, அரபிக்கடலில் நிலவி வரும் குறைந்த…
டெல்லி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை (மே 24, 2025) நடைபெறவுள்ள நிதி…
இந்தியா vs பாகிஸ்தான் போர் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்த நிலையில், பாகிஸ்தான் அத்துமீறினால் நாங்கள் அதற்கு பதிலடி கொடுப்போம்…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…
அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…