சேப்பாக்கம் மைதானத்தில் இருந்து ‘கலைஞர் 100’ விழா வேறு இடத்திற்கு மாற்றம்!

kalaignar 100 function

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு ஆண்டு விழாவை  திரைத்துறை சார்பில் திரைபிரபலன்கள் முன்னெடுத்து பிரமாண்டமாக அடுத்த ஆண்டு ஜனவரி 6 (06.01.2024) தேதி நடத்தவுள்ளார்கள். விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ள காரணத்தால் சென்னை, சேப்பாக்கத்தில்  வைத்து நடத்தினால் சரியாக இருக்கும் என திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், தற்போது அந்த இடத்தில் நடைபெறாது எனவும் அதற்கு பதிலாக வேறு மைதானத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏனென்றால், சென்னை, சேப்பாக்கத்தில் ரஞ்சிக்கோப்பை போட்டிகள்  நடைபெற உள்ளது. அது மட்டுமின்றி, இந்த நிகழ்ச்சியை நடத்த தேவையான இடவசதிக்காகவும் புதிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, கலைஞர் 100 விழா சென்னை, சேப்பாக்கத்தில்  இருந்து கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

‘கலைஞர் 100’ நிகழ்ச்சிக்கு விஜய் – அஜித்துக்கு நேரில் அழைப்பு விடுப்பு.?

இந்த விழா மிகவும் பிரமாண்டமாக இருக்கவேண்டும் என்பதால் ரஜினிகாந்த் மற்றும் கமல் என தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவை கலந்து கொள்ளவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், அமிதாப் பச்சன், மோகன் லால், சிவராஜ் குமார், சிரஞ்சீவி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே கருணாநிதியின் நூற்றாண்டு ஆண்டு விழா சென்னை, சேப்பாக்கத்தில் டிசம்பர் 24-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. அதன்பிறகு மிக்ஜாம் புயல், வெள்ள நிவாரணப் பணிகள் காரணமாக தேதி ஒத்திவைக்கப்படுவதாகவும் அடுத்த ஆண்டு ஜனவரி 6 (06.01.2024) தேதி நடக்கும் எனவும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்